தெலுங்குத் திரையுலகின் இளம் கதாநாயகர்களில் முன்னணியில் இருப்பவரான விஜய் தேவரகொன்டா மற்றும் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்னாத் இணையும் படத்திற்கு ‘லைகர்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை ஹிந்தித் திரையுலகின் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஆண் புலி, பெண் சிங்கத்துடன் கலப்பதால் உருவாகும் கலப்பின விலங்கே லைகர் (Liger).
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
விஜய் ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனன்யா பாண்டே நடிக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் முதல் பார்வையை நேற்று வெளியிட்டனர்.
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் மிக முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி, மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் சீனு ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.