சிக்கலில் ‘எல்.ஐ.சி’: விக்னேஷ் சிவன் – பிரதீப் மனக்கசப்பு?

‘எல்.ஐ.சி’ படப்பிடிப்புக்கு இடையே விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் எல்.ஐ.சி. லலித் குமார் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், எடிட்டராக பிரதீப் ராகவ், இசையமைப்பாளராக அனிருத் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

இதனிடையே, ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் ரவி வர்மன். மேலும், சொன்ன தேதிகளில் படப்பிடிப்பு நடக்காததும் இதற்கு காரணம் என்கிறார்கள். ரவி வர்மனைத் தொடர்ந்து நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது அவரும் சொன்ன தேதிகள் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால், இதிலிருந்து விலகி ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு சென்றுவிட்டார். வேறொரு ஒளிப்பதிவாளருடன் பணிபுரிய படக்குழு முடிவு செய்து, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

குறித்த தேதியில் படப்பிடிப்பு நடக்காதது மட்டுமன்றி, விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இருவருக்குமே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால் காட்சியமைப்பு பேப்பரில் என்ன இருந்ததோ, அதே போல் படமாக்கப்படதது தான் காரணம் என்கிறார்கள். இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது.

அனைத்து நடிகர்களின் தேதிகளையும் வாங்கி, ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை முடிப்பதற்குள் பெரும் சிக்கலை படக்குழு சந்திக்கும் என்கிறார்கள்.

Read Previous

நடிகர் விஷாலின் ‘தேவி அறக்கட்டளை’ வழங்கும் உதவிகள்

Read Next

தாமதமாகிறது ‘விடுதலை 2’ வெளியீடு

Most Popular