‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து, போஸ்டர் மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். காட்சிகளைப் பார்த்த வெற்றிமாறன், படக்குழுவின் உழைப்பைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தயாள் பத்மநாபன் இயக்கும் இந்தப் படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பெரியாரியவாதி சுப. வீரபாண்டியன் முக்கியமான பாத்திரத்தில் நடிப்பது சிறப்பு.
தயாளுடன், கவிதா பாரதி திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு எம்.வி. பனீர்செல்வம், தொகுப்பு வி. பூபதி, இசை தர்புகா சிவா.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.