‘கலகலப்பு 3’ பணியில் சுந்தர்.சி. தீவிரம்

‘கலகலப்பு 3’ படத்தின் பணிகளில் சுந்தர்.சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை 4’. இந்தப் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, மீண்டும் ‘கலகலப்பு 3’ படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி.

இதன் பணிகளை சில மாதங்களுக்குப் பிறகு தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதே அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி

‘கலகலப்பு 3’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மிர்ச்சி சிவா, வாணி போஜன் ஆகியோர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தப் படத்தினையும் இந்தாண்டிற்குள் முடித்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

இப்போது தனது படங்களுக்கு உருவாகியுள்ள வியாபார முன்னேற்றத்தினை விட்டுவிடாமல் தொடர்ச்சியாக படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி.

Read Previous

விளம்பர நிகழ்விலும் பிரம்மாண்டம் காட்டும் ‘கல்கி’

Read Next

”கருடன்” படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே விடுதலை படம் தான் – சூரி

Most Popular