கைதி – புதிய காலகட்டத் திரைப்படம், மகேஷ் பாபு பாராட்டு

டிரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘கைதி’.

விஜய் நடித்த ‘பிகில்’ படத்திற்குப் போட்டியாக வெளிவந்தாலும் அந்தப் படத்தை விட பிரமாதமான படம் என ரசிகர்களின் பாராட்டுக்களை ‘கைதி’ படம் பெற்றுள்ளது.

திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்களைப் பாராட்டி வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனான மகேஷ் பாபு ‘கைதி’ படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில், “கைதி, புதிய காலகட்டப் படம். விவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள், பரபரப்பான திரைக்கதையில் அற்புதமான நடிப்பு, பாடல்கள் இல்லை, வரவேற்கத்தக்க மாற்றம், அனைத்து குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘கைதி’ படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் இரண்டாவது வாரத்தைக் கடந்து பெரிய வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

https://twitter.com/urstrulyMahesh/status/1190334308487065600

Read Previous

பிகில் – பிகில் பிகில் பிகிலுமா – பாடல் வீடியோ

Read Next

கேப்மாரி – டிரைலர்

Most Popular