கபடதாரி – இன்று பூஜையுடன் ஆரம்பம்

கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, பூஜா குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் பலர் நடிக்க ‘கபடதாரி’ படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.

இன்று நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சிவகுமார் படத்தைத் துவக்கி வைத்து படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் கே கிங், தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர், வசனகர்த்தா ஜான் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

படத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

‘கைதி’, மிகப் பெரிய சந்தோஷம் – மரியம் ஜார்ஜ்

Read Next

கதிர் நடிக்கும் ‘சர்பத்’ – டீசர்

Most Popular