டப்பிங்க் பணியை துவக்கிய “ஜோ” படக்குழு

நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்க கூடிய 'ஜோ' திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடைந்தது. நேற்று (ஜனவரி 23, 2023)-ல் எளிமையான பூஜையுடன் படக்குழு டப்பிங்கைத் தொடங்கியுள்ளது.

ஃபீல் குட் லவ் கதையாக உருவாகியுள்ள 'ஜோ' திரைப்படத்தை டாக்டர். D. அருளானந்தின் விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்து இருக்கிறது. 17 வயதில் இருந்து 27 வயது வரையிலான இளைஞன் ஒருவனின் காதல் கதையை இந்தப் படம் கூற இருக்கிறது. சென்னை, ராமேஸ்வரம், ராம்நாட், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் என வெவ்வேறு இடங்களில் இது படமாக்கப்பட்டுள்ளது.

Read Previous

மதுரையில் துவங்கியது “கிரிமினல்” படப்பிடிப்பு

Read Next

பிரைம் வீடியோவில் கவர்ந்திழுக்கும் “எங்க ஹாஸ்டல்”

Most Popular