தனுஷ் 40 படத் தலைப்பு ‘ஜகமே தந்திரம்’

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘ஜகமே தந்திரம்’ என அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் தலைப்பாக ‘சுருளி’ என்று வைக்கப்பட்டதாக அடிக்கடி ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருந்தது. அதுதான் தலைப்பு என்று சொல்லப்பட்ட நிலையில் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பை அறிவித்துள்ளார்கள். அத்துடன் மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் கூட்டணியின் முதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடைபெற்றுள்ளது.

மே 1ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. 

Read Previous

கன்னி மாடம் – டிரைலர்

Read Next

ஜகமே தந்திரம் – மோஷன் போஸ்டர்

Most Popular