விஜய் மகனின் படத்துக்கே இந்த நிலையா என்று திரையுலகினர் பலரும் அதிர்ச்சியுடன் இருக்கிறார்கள்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இந்தப் படத்தின் கதை விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பெரிய பொருட்செலவில் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது மாதிரி இதனை தயாரிக்க திட்டமிட்டது லைகா நிறுவனம்.
தற்போது நிலைமையோ தலைகீழாகிவிட்டது. பெரிய பட்ஜெட்டில் எழுதியிருந்த கதையினை பட்ஜெட்டை குறையுங்கள் என்று கூறிவிட்டது லைகா நிறுவனம். இப்போது ஓடிடி, தொலைக்காட்சி உரிமை என விற்பனையாகாத காரணத்தினால் இந்த முடிவினை எடுத்திருக்கிறது.
பெரிய நடிகர்கள் யாரிடமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தேதிகள் இல்லை. இப்போது பட்ஜெட் குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்தவுடன் அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற நாயகர்களிடம் பேச இருக்கிறார்கள். நடிகர்கள் கதை கேட்டு, தேதிகள் கொடுத்து, பட்ஜெட்டும் சரியாக அமைந்தால் மட்டுமே படத்தை தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது லைகா நிறுவனம்.
விஜய்யின் மகன் படத்துக்கே இந்த நிலையா என்று திரையுலகினர் பலரும் அதிர்ச்சியுடன் இருக்கிறார்கள்.