சிறுவர், சிறுமியர் பார்க்க முடியாது…
விஜய் நடிக்க ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்று (ஜூலை 9, 2026) தணிக்கை வாரியம் (CBFC) அதிகாரப்பூர்வமாக ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதன் காரணமாக 18 வயதுக்குக் கீழ் உள்ள யாரும் படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. சிறுவர்கள், சிறுமியர்கள், குழந்தைகள் படங்களைப் பார்க்க அனுமதியில்லை.
நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு படம் இறுதியாக தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. சுமார் 3 மணி நேர நீளம் கொண்ட இப்படத்தில் 13 தணிக்கை உத்தரவுகள் பின்பற்றப்பட்டு, வன்முறை காட்சிகள் மற்றும் சில வசனங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ஜனவரி 9, 2026 அன்று வெளியாக திட்டமிடப்பட்ட இப்படம், தணிக்கை வாரியத்தின் பல்வேறு ஆட்சேபனைகள், வன்முறை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் குறித்து பல சுற்று திருத்தங்கள் கோரப்பட்டதால் தாமதமானது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஏப்ரல் 2026 இல் படத்தின் HD பதிப்பு இணையத்தில் லீக் ஆனதால் பிரச்சனை மேலும் அதிகரித்து, சான்றிதழ் செயல்முறை நீண்டு போனது.
விஜயின் கடைசி திரைப்படம் என்பதாலும் கதையின் அரசியல் தன்மையாலும் கூடுதல் பரபரப்பை இப்படம் ஏற்படுத்தியது.
இன்று அதிகாரப்பூர்வ சான்றிதழ் கிடைத்ததால், ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.