வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் இன்று ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால் அதை விரைந்து வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 6ம் தேதி தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு போடப்பட்டது.
வழக்கை மறுநாளும் விசாரித்த நீதிபதி, தீர்ப்பு இன்று வழங்குவதாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று காலை ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இன்று மாலை வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்து வழக்கை ஜனவரி 21ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து படம் வெளிவருவதில் இருக்கும் தணிக்கை சிக்கல் நீடித்து வருகிறது. தணிக்கை சான்றிதழைப் பெற்ற பிறகே படம் வெளியாகும்.