நான்கு கதாநாயகிகள் நடிக்கும் படம்

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 

வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். கதையின் நாயகனாக எஸ்.எஸ்.பிரபு அறிமுகமாகிறார்.

அமெரிக்காவில் ஆங்கிலப்படம் மற்றும் டெலி பிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். 

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். 

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Read Previous

பேச்சுலர் – விமர்சனம்

Read Next

25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோகன்லால், பிரபு, பிரியதர்ஷன் கூட்டணி

Most Popular