‘கூலி’ படத்திலிருந்து ஃபகத் பாசில் விலகியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கூலி’. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட அரங்கில் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஃபகத் பாசிலும் இவர்களுடன் ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது இதிலிருந்து ஃபகத் பாசில் விலகியிருக்கிறார்.
அவருடைய கதாபாத்திரத்தில் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ஏனென்றால் 2-ம் கட்ட படப்பிடிப்பில் அந்தக் கதாபாத்திரத்தின் காட்சிகள் இருப்பதால், உடனடியாக தேதிகள் கொடுக்கக் கூடிய நடிகராக பார்த்து வருகிறார்கள். தமிழ் நடிகர்கள் அனைவரும் பிஸி என்பதால் மலையாளத்திலேயே தேடி வருகிறார்கள்.