‘திரௌபதி 2’ பற்றி படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி

நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில், மோகன்ஜி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திரௌபதி 2’.

ஜனவரி 23 வெளியாக உள்ள இப்படம் குறித்து படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி கூறுகையில்,

“திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். 

இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. 

ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். 

நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Read Previous

ராஜு முருகன், சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’ டிரைலர் வெளியீடு

Read Next

‘திரௌபதி 2’ பற்றி நாயகிகள் ரக்ஷனா, தேவியானி

Most Popular