‘திரௌபதி 2’ பற்றி தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி

நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில், மோகன்ஜி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திரௌபதி 2’.

இன்று (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் 450 + திரையரங்குகளில் வெளியாகும் ‘திரெளபதி’ திரைப்படத்தை தயாரித்திருப்பதன் மூலம் திரைத்துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி.

படம் குறித்து அவர் கூறுகையில்,

“இயக்குநர் மோகன் ஜி ‘திரெளபதி 2’ கதையை பிரம்மாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய டைரக்‌ஷன் ஸ்டைல், சரியான திட்டமிடல், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் பல சவால்களை தாண்டி படத்தை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க உதவியது. எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரிச்சர்ட் ரிஷியின் வலுவான திரை ஆளுமை, ரக்‌ஷனா இந்துசூடனின் திறமையான நடிப்பு, நட்டி நடராஜ், வேல ராமமூர்த்தி, தேவியானி ஷர்மா மற்றும் திவி வைத்தியநாதன் என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இது சர்ச்சைக்குரிய படம் அல்ல, நாம் வாழ்ந்த வரலாற்றை பேசும் கதை. சுபாஷ் சந்திரபோஸின் 129 ஆவது பிறந்தநாளை ஒட்டி இந்தப் படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்,” என்றார்.

 

Read Previous

எஸ் ஜானகி பேத்தியின் வேண்டுகோள்

Read Next

வங்காள விரிகுடா – விமர்சனம்

Most Popular