தனது சம்பளத்தினை கிடுகிடுவென உயர்த்திவிட்டார் தனுஷ்.
‘வாத்தி’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ என கடைசியாக வெளியான இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு வெற்றியை கொடுத்த படங்கள். தற்போது ’இளையராஜா’ மற்றும் ‘குபேரா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் ‘ராயன்’ வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.
இதனிடையே, தனது சம்பளத்தினை கிடுகிடுவென உயர்த்திவிட்டார் தனுஷ். 4 தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘இளையராஜா’ பயோபிக்கினை தயாரிக்கவுள்ளது. இதில் நடிப்பதற்கு சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் தனுஷ்.
அனைத்து மொழிகளிலும் வெளியீடு என்பதால் இந்த சம்பளத்தினை பெற்றுள்ளார் தனுஷ். மேலும், இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் பணிபுரிந்து வருகிறார் தனுஷ். பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் ‘இளையராஜா’ பயோபிக் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.