லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 8ம் தேதி அமெரிக்காவில் நடத்துகிறது.
வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது.
ரஜினிகாந்திற்கு வெளிநாடுகளில் அமெரிக்காவில் தான் மிகப் பெரும் மார்க்கெட் உள்ளது. வேறு எந்த தமிழ் ஹீரோக்களுடன் ஒப்பிடமுடியாத அளவிற்கு அவருடைய சந்தை மதிப்பு அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்கா முழுவதும் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைகளில் தற்போது வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்.