தாதா – தி சௌரவ் கங்குலி ஸ்டோரி, முதல் பார்வை வெளியீடு

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது.

திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்குகின்றனர். லவ் ஃபிலிம்ஸ் தயாரிப்பாக  ( Luv Films production ) உருவாகியுள்ள இப்படம், 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Read Previous

மிஸ்டர் பாரத் – அடுத்த நம்பிக்கையான படம்

Read Next

இதயம் முரளி – முன் வெளியீட்டு விழா

Most Popular