பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் ‘பேங் பேங்’

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான பிரபுதேவா, வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படத்தினை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, எச்சி வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார். சவுண்டு டிசைனை ‘அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync சினிமா செய்திருக்கிறார்கள். சவுண்டு மிக்ஸிங்-ஐ தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனேன் செய்கிறார். நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் (Indonesia) உள்ள மவுண்ட் ப்ரோமோ (Mount Bromo) என்ற இடத்தில் செயலில் இருக்கும் எரிமலை;g பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

வித் லவ் – டிரைலர் வெளியீடு

Read Next

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா

Most Popular