அட்லி சம்பளம் இவ்வளவா? – இணையத்தில் ஆச்சரியம்

அட்லி சம்பளம் குறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவலால் அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜவான்’. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் அமோக வரவேற்பைப் பெற்றது. சுமார் 1000 கோடியைத் தாண்டி வசூல் சாதனை புரிந்தது.

இந்தப் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் தெரிந்த இயக்குநராக வலம் வருகிறார் அட்லி. சமீபத்தில் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துக் கொண்டார். அப்போது கூட மும்பை நாயகர்கள் அனைவருமே அட்லி இயக்கத்தில் நடிக்க வரிசையில் நிற்பதாக ரன்வீர் சிங் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

‘ஜவான்’ படத்தினைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் அட்லி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் பேச்சுவார்த்தை அளவில் இருக்கிறது. இன்னும் ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.

இதனிடையே இந்தப் படத்துக்கு அட்லிக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் என இணையத்தில் தகவல் பரவியுள்ளது. இந்த தகவலால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளார்கள். தற்போதைக்கு தென்னிந்திய இயக்குநர்களில் அதிகம்  சம்பளம் வாங்கும் இயக்குநராக அட்லி இருக்கிறார். ஆனால், இந்த தகவலை இன்னும் அட்லி தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

தமிழில் அட்லி இயக்கிய படங்கள் வரவேற்பைப் பெற்றாலும், அனைத்துமே தழுவல் தான் என்று விமர்சிக்கப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

Read Previous

‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நிறுத்தம்: காரணம் என்ன?

Read Next

எகிறும் பட்ஜெட்: ‘அமரன்’ படக்குழுவினர் கலக்கம்