24 பிரேம்ஸ் பேக்டரி, அவா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெப்ரி கீ சின் இயக்கத்தில் சாம் சி.எஸ், இசையமைப்பில், விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி நவ்தீப், நவீன் சந்திரா, ருஹி சிங் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மோசகல்லு’.
இப்படத்தை தமிழில் ‘அனு அண்ட் அர்ஜுன்’ என்ற பெயரில் டப்பிங் செய்து இந்த மாதம் மார்ச் 19ம் தேதி வெளியிட உள்ளார்கள்.
தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள ஒரு த்ரில்லர் படம் இது. படத்தின் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
படத்தில் சுனில் ஷெட்டி தவிர மற்ற அனைவருமே நெகட்டிவ் கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளார்களாம்.
நிஜ வாழ்க்கையில் ஐ.டி. துறையில் நடந்த 2800 கோடி ரூபாய் மோசடியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரி செலுத்திய மக்கணின் பணத்தை இந்தியாவில் உள்ள ஒரு கால் சென்டரில் எப்படி மோசடி செய்து சம்பாதித்தார்கள் என்பதுதான் இப்படத்தின் ஹைலைட்டாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்கள்.