‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் – ஆன்மீகமா, அரசியலா ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அண்ணாத்த’ என்ற தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.

ரஜினிகாந்தின் 168வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தில் மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கிறார்கள். ரஜினி படத்தில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை முதல் முறையாக சிவா இயக்குகிறார். ரஜினிகாந்த் படத்திற்கு முதல் முறையாக இமான் இசையமைக்கிறார். இப்படி சில முதல் முறை விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன.

‘அண்ணாத்த’ படத்தின் பெயரைப் பார்க்கும் போது அரசியலுக்காக வைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. டைட்டில் டிசைன் ஆன்மீகம் கலந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது

அண்ணாத்த – மோஷன் போஸ்டர்

 

Read Previous

திரௌபதி – திரைப்பட காட்சி வீடியோ

Read Next

அண்ணாத்த – மோஷன் போஸ்டர்

Most Popular