தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமான இருக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதன் 13வது படத் தயாரிப்பை ஆரம்பித்துள்ளது.
‘சிறை ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் ஜாபர் சாதிக், நோபல் கே ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை பிஎஸ் ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜாலியான படமாகத் தயாராகும் இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். விஷ்ணு குமார் இணை தயாரிப்பு செய்கிறார்.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுமுக நடிகர் L. K .அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான, ‘சிறை ‘ திரைப்படம் இதுவரை உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.