அஜித், விஜய் ரசிகர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ?

கொரானோ வைரஸால் இந்த உலகமே அழிந்து போனால் கூட அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்குமான மோதல் முடியவே, முடியாது போலிருக்கிறது.

நாளுக்கு நாள் கொரானோ வைரஸ் அதிகவேகமாகப் பரவி வரும் நிலையில் அதற்கு ஏதாவது விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம் என்று எண்ணாமல் வெட்டியாக டிவிட்டரில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது அந்த ரசிகர்கள் கூட்டம்.

இன்று மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில் அஜித் நடித்த ’ஆரம்பம்’ படம் எப்படியும் 50வது முறை ஒளிபரப்பாகலாம். ஜீ தமிழ் டிவியில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் 5வது முறைக்கும் மேலாக ஒளிபரப்பாகலாம்.

என்னமோ, புதிய படத்தை ஒளிபரப்புவது போல அந்த இரண்டு படங்களில் எதை டிவிட்டரில் அதிகப் பதிவுகளுடன் டிரென்டிங்கில் கொண்டு வருவது என இருவரது ரசிகர்களுக்குள்ளும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

தாங்கள் சார்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கும், நடிகர் சங்கத்தில் உள்ள ஏழை உறுப்பினர்களுக்கும் உதவி செய்யக் கூட இதுவரை அஜித், விஜய் ஆகியோர் முன்வரவில்லை. அவர்களது ரசிகர்களும் அப்படித்தான் பொறுப்பற்று இருப்பார்கள் போலிருக்கிறது

Read Previous

நவம்பர் 6க்கு தள்ளிப் போன ‘பிளாக் விடோ’ ரிலீஸ்

Read Next

நடிகர் சங்க கொரானோ நிதி வசூல் – 15 லட்சம் மட்டுமே

Most Popular