நடிகர், டாக்டர் சேது திடீர் மரணம்

சந்தானம் நாயகனாக நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடிகராக அறிமுகமானவர் சேரு. இவர் ஒரு தோல் மருத்துவ டாக்டர். எம்பிபிஎஸ், எம்டி படித்தவர். மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்.

 ‘வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா', 50/50' ஆகிய படங்களில் நடித்தவர். சென்னையில் மனைவி உமையாள், ஒரு மகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருக்கு 37 வயதே ஆகிறது.

சேது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் சேது. “எனது நெருங்கிய நண்பன் சேது மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

அள்ளிக் கொடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள்

Read Next

தமிழ், ஹிந்தியில் டப்பிங் பேசிய ஜுனியர் என்டிஆர்

Most Popular