டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.
இன்று இப்படத்தில் நடிக்கும் ராம் சரண் தேஜாவின் பிறந்த நாள். அதை முன்னிட்டு ராம் சரண் நடிக்கும் ராமராஜு கதாபாத்திரத்தின் அறிமுகத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அதற்கான வீடியோ வெளியாகியுள்ளது. இதில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் அந்த வீடியோவிற்கு ஜுனியர் என்டிஆர் குரல் கொடுத்திருக்கிறார்.
ஓரிரு வார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகளை சரியாகவே உச்சரித்திருக்கிறார். அவரது கணீர் குரல் வீடியோவுக்கு ஒரு தாக்கத்தைக் கொடுத்துள்ளது.