டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதால் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான ஹீரோக்கள் ஒருவரை அப்படி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்கலாம் என்கிறார்கள்.
ஆனால், இது குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மோஷன் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இன்று ராம்சரணின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.