55 கோடி வசூலித்த ‘கட்டா குஸ்தி 2’

செல்ல அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 3ம் தேதி வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’.

இப்படம் 55 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில்,

“50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது எனது முதல் திரைப்படம். நான் ஒரு போதும் மறக்க முடியாத ஒரு தருணம் இது.

‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு டிக்கெட் எடுத்து, அதைப் பார்த்து சிரித்து உற்சாகமடைந்து கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,

உங்கள் அன்பே எனது மிகப் பெரிய பலம். தொடர்ந்து இன்னும் கடினமாக உழைத்து, சிறந்த கதைகளைச் சொல்லி, என்னால் முடிந்தவரை உங்களை மகிழ்விப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் வெளியான படங்களில் இந்தப் படமும் முக்கியமான வெற்றிப் படமாக இணைந்துள்ளது.

Read Previous

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் ‘ஹாய்’

Read Next

கான்சிட்டி – வெற்றிக்கு நன்றி தெரிவித்த விழா