ஸ்ருதிஹாசன் மீதான தடை விலகும் ?

நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். திடீரென அந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஸ்ருதிஹாசன் தெரிவித்ததை அடுத்து அவர் மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றமும் ஸ்ருதிஹாசன் புதிய படங்களில் நடிக்கக் கூடாதென தீர்ப்பு வழங்கியது.

இதன் பின் தயாரிப்பு நிறுவனமும், ஸ்ருதிஹாசனும் பிரச்சனையை தீர்த்துக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடையே எழுந்தது. இந்தப் பிரச்சனையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் தலையிட்டு படத் தயாரிப்பு நிறுவனமான பிக்சர் ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனத்திடும் பேச்சுவார்த்தை நடத்தின.

அதைத் தொடர்ந்து திரைப்பட சங்கங்கள் இந்தப் பிரச்சனையில் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ருதிஹாசன் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், ஸ்ருதிஹாசன் மீதான தடை விரைவில் விலக வாய்ப்புள்ளது.

Read Previous

‘டண்டணக்கா…’ பாடல்…டி.ராஜேந்தர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்

Read Next

Natpadhigaram 79 – Official Trailer