ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படம் நேற்றே வெளியாக வேண்டியது. சில நிதிப் பிரச்சனைகள் காரணமாக இந்தியாவில் மட்டும் வெளியாகாமல் போய்விட்டது. ஆனால், வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இரண்டு நாட்களாக இடைவிடாது நடந்து வந்த பேச்சுவார்த்தையின் பலனாக மொத்த நிதிப் பிரச்சனைகளும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டு இப்போது படம் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்றே படம் பார்க்க திரையரங்குகளுக்கு வந்த பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர்களின் ஏமாற்றத்தைப் போக்கும் அளவில் இன்று படம் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே இருந்த அதிருப்தியை நீக்கியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் இந்தப் படம் மேலும் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை என்று விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.