ராஜ் டிவியின் ‘வெள்ளித் திரை’ 500வது நாளில்…

ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெள்ளித்திரை’.

இந்த நிகழ்ச்சியில் திரையுலகில் தினமும் நடைபெறும் சம்பவங்கள் செய்திகளாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது மேலும், திரையுலகிற்கு வரும் புதுமுகங்களை அறிமுகப் படுத்தும் ‘புதுமுகம் அறிமுகம்’, சாதனைப் படத்தை பிரபலங்களைப் பற்றிச் சொல்லும் பகுதி ‘வெள்ளித் திரையில் இவர்’, அந்தந்த வாரம் வெளியாகும் படங்களைப் பற்றிச் சொல்லும் ‘இந்த வாரம் வெளியாகும் படங்கள்’, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து அப்படக் குழுவினர் தரும் தகவல்களை சொல்லும் ‘திரைமலர்’, தமிழ்த் திரையுலகின் சரித்திரத்தை இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் சுவைபட தொகுத்து வழங்கும் ‘அந்த நாள் ஞாபகம்’ என திரையுலகின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயனுள்ள நிகழ்ச்சியாகவும், மக்களுக்கு நல்ல பொழுதுப்போக்கு நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வரும நிகழ்ச்சி இது .

இந்த வெள்ளித்திரை நிகழ்ச்சி வரும் புதன் கிழமை (20.05.2015) 500வது எபிசோடில் காலடி எடுத்து வைக்கிறது. அன்று ஒளிபரப்பாகும் 500வது எபிஷோடில் பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துரமன், விக்ரமன், நடிகர்கள் பிரபு, ராதாரவி, ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, நடிகைகள் கார்த்திகா, கோவை சரளா, ரேகா உட்பட பலர் அளித்துள்ள வாழ்த்து மற்றும் வெள்ளித்திரை நிகழ்ச்சி பற்றிய அவர்களது பகிர்வுகள் ஒளிபரப்பாகிறது. .

தேவிகிருபா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்கம் – ஜி.பாலன், ஒளிப்பதிவு – மணிவேல், படத்தொகுப்பு – ஜா.சாவியோ பால்ராஜ், தயாரிப்பு – ராஜ் டிவி

Read Previous

விஜய் டிவி – மே 18 – 22 – திரைப்படங்கள் விவரம்…

Read Next

ஜெயா டிவி – மே 18 – 24 – திரைப்படங்கள் விவரம்…