வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், ராஜ் குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜீது ஜோசப் இயக்கித்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், பேபி எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பாபநாசம்’.
இந்தப் படத்தின் தணிக்கை இன்று நடைபெற்றது. படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜுலை 3ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படம் தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.