தென்னிந்தியாவில் சிறந்த இயக்குனர், நம்பர் 1 இயக்குனர் ஷங்கரா, அல்லது ராஜமௌலியா என கடந்த சில நாட்களாகவே பரபரப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால், அவர்களிருவரும் பெருந்தன்மையுடன் ஒருவரை மற்றவர் பாராட்டுவதும், அந்த பாராட்டுக்கு மற்றவர் மதிப்பு கொடுப்பதுமாக தங்களது பணிவான இயல்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ராஜமௌலிக்கு ஷங்கர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “பாகுபலி’ ஒரு காவியக் கற்பனை. கவித்துவமான எண்ணங்கள், அற்புதமான கதாபாத்திரப் படைப்புகள், சூப்பர் ஹீரோயிசம், அதி அற்புதமான காட்சிகளுடன் ‘வாவ்’ போட வைக்கிறது. ராஜமௌலிக்கும் அவருடைய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் வாழ்த்துக்கு ராஜமௌலி அளித்துள்ள பதிலில், ““உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. எங்கள் குழுவினருக்கு மிகவும் சந்தோஷம். உங்கள் வார்த்தைகள் புகழுரை மட்டுமல்ல, ஒரு சான்றிதழ்,” என பெருமைப்பட்டுள்ளார்.
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இவர்களிருவருமே சிறந்த உதாரணம்.