விஜய், சிம்பு திடீர் நெருக்கம் ஏன் ?

சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் சமீப காலமாக சிம்புவும், விஜய்யும் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார்கள்.

இது தமிழ்த் திரையுலக வட்டாரத்தை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது. ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் டி.ஆர்-தான் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு இசை வெளியிடும் நிகழ்வில் கூட முன்னால் நிற்கிறார்.

‘வாலு’ படம் வெளிவர விஜய் அவரால் முடிந்த உதவிகளை செய்துள்ளது உண்மைதான் என்பது திரையுலகத்தினர் அனைவருக்கும் தெரியும். சுமார் பத்து கோடி வரையில் விஜய் மறைமுகமாக உதவி செய்திருக்கிறார் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமாக ‘தலைவா’ படப் பிரச்சனையைக் கூறுகிறார்கள். ‘தலைவா’ படத்தின் வெளியீட்டிற்கு பிரச்சனை வந்த போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் படத்திற்கு ஆதரவாக சிம்பு கருத்து தெரிவித்தது விஜய்யை மிகவும் நெகிழ வைத்ததாம்.

முன்னணிக் கலைஞர்களே எந்த முணுமுணுப்பையும் தெரிவிக்காத போது சிம்பு தைரியமாக கருத்துத் தெரிவித்தது அவரைக் கவர்ந்துவிட்டது என்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், சிறு வயதிலிருந்தே விஜய் டி.ஆரின் தீவிர ரசிகராம். ‘தலைவா’ படப்பிரச்சனையின் போது சிம்பு தெரிவித்த ஆதரவிற்காகவே இப்போது ‘வாலு’ படத்திற்கு பண ரீதியில் பிரச்சனை வர, விஜய் அதைச் சரிக்கட்டியிருக்கிறார்.

சிம்பு மீது விஜய்யின் இந்தப் பாசம் அஜித் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அது மட்டுமல்ல, விஜய் தனிக் கட்சி ஆரம்பிக்கும் போது அதில் டிஆருக்கு முக்கியப் பதவி காத்திருக்கிறது என்றும் கோடம்பாக்க வட்டாரங்களில் ஒரு அதிரடியான செய்தி உலவி வருகிறது.

 

Read Previous

Atharva’s hopes high on Chandi Veeran

Read Next

‘ஆவி குமார்’ தந்த நம்பிக்கை – உதயா