‘திருடன் போலீஸ்’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும், இயக்குனர் கார்த்திக் ராஜுவும் இணைந்து வழங்கும் படம் ‘உள்குத்து’.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நாகர்கோவிலில் துவங்கியது. ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா, பாலசரவணன், ஷரத், ஜான் விஜய், சாயா சிங், திலீப் சுப்பராயன், செஃப் தாமோதரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
“மீனவர்களின் வாழ்வியலைப் பற்றி விவரிக்கும் இந்தக் கதைக்கு நாகர்கோவில் தான் சிறந்த கதைக் களமாகும்.
ஒரு பக்கம் அரேபிய கடல், மறுபுறம் மேற்குத் தொடர்ச்சி மலை என்று நாகர்கோவில் ஒரு அழகிய நகரமாகும். அந்த நகரத்தின் கலாச்சாரமும், அந்த நகரத்து மக்களின் வாழ்வியலும் மிகவும் சுவராசியமானது.
நான் பார்த்த, என் கண்களைக் கவர்ந்த அந்த நகரத்தின் அழகை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இந்தப் படத்தை ஆரம்பித்துள்ளேன்,” என்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.