‘அட்டகத்தி, மெட்ராஸ்’ படங்களுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் படத்திற்க ‘கபாலி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் சற்று முன்னர் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அந்தப் படத்தின் பெயரை பவர்ஃபுல்லாக அமைவது வழக்கம். எந்தப் பெயரை வைத்தாலும் அதன் பின் அந்தப் பெயர் பரபரப்பாகப் பேசப்படும்.
‘வீரா, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சிவாஜி, லிங்கா’ வரிசையில் ‘கபாலி’யும் இடம் பிடிக்கப் போவது உறுதி…