வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விஷால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பாயும் புலி’.
இந்தப் படத்தின் தணிக்கை இன்று நடைபெற்றது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளார்கள்.
‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் இந்தப் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை செப்டம்பர் மாதம் 4ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.