‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் இமான் இசையமைத்துள்ள படம் ‘10 எண்றதுக்குள்ள’.

விக்ரம், சமந்தா, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் கன்னியாகுமரியிலிருந்து நேபாளம் வரையிலான ஒரு சாலைப் பயணப் படம்.

வித்தியசாமான கதாபாத்திரத்தில் விக்ரம், சமந்தா இருவருமே நடித்துள்ள இந்தப் படத்தில் மிரட்டலான பல ஆக்ஷன் காட்சிகள் அமைந்துள்ளன.

அக்டோபர் 21ம் தேதி வெளிவர உள்ள இந்தப் படத்தின் தணிக்கை முடிவடைந்துவிட்டது. அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சான்றிதழ் இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Read Previous

மாணவர்கள் உருவாக்கிய ‘மய்யம்’ 16ம் தேதி ரிலீஸ்

Read Next

Thoongaavanam – Official Trailer – 2