ஆரா சினிமாஸ் வெளியிடும் ‘உப்பு கருவாடு’…

“அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம்” உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கிய ராதா மோகன் ‘கௌரவம்’ படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘உப்பு கருவாடு’.

ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா, சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமிழ்த் திரை உலகில் தரமான படங்களை வாங்கி வெளியிடுவோர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுள்ள ஆரா சினிமாஸ் இப்படத்தை வாங்கி வெளிடுகின்றனர்.

ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் இது பற்றி கூறுகையில்,

‘எங்களது நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தரமான படங்களை ரசிகர்களுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான். அந்த வகையில் ‘உப்பு கருவாடு’ படம் எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் எனலாம்.

எனக்கு இயக்குனர் ராதாமோகன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இயக்கிய ‘உப்பு கருவாடு’ படத்தை வாங்கி வெளியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

எல்லா தரப்பு ரசிகர்களும் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய இந்த ஜன ரஞ்சகமான படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அக்டோபர் 11ம் தேதி நடக்கவுள்ளது.

விரைவில் பட வெளியீடு பற்றி அறிவிக்க உள்ளோம்,” என்றார்.

Read Previous

தனுஷ் நடிக்கும் ‘தங்க மகன்’…

Read Next

நடிகை மனோரமா மரணம், இன்று மாலை உடல் தகனம்