தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ‘வேதாளம்’ ஃபீவர் அஜித் ரசிகர்களை அதிகமாகவே தொற்றிக் கொண்டுள்ளது.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக ‘வேதாளம்’ படத்தின் டிரைலர் எதுவும் வெளியீட்டிற்கு முன்னர் வெளிவர வாய்ப்பே இல்லை என படக் குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தை முடிப்பதற்கே நேற்று வரை இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றதால் டிரைலரை உருவாக்க நேரம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
‘வேதாளம்’ டீசரை இந்திய அளவில் சாதனை படைக்க வைத்த அஜித் ரசிகர்கள், டிரைலர் வெளிவந்தால் அதை இன்னும் தெறிக்க விடத் தயாராக இருந்தார்கள்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது.
படம் வெளிவந்து வெற்றி பெற்ற பின் டிரைலரே வராமல் வெற்றி பெற்றது ‘வேதாளம்’ என தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.