அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படம் உலகம் முழுவதும் பல நாடுகளில் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது.
சில வெளிநாடுகளில் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக 9ம் தேதியன்றே சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, யுனைட்டெட் கிங்டம், ஜெர்மனி, டென்மார்க், ஹாலந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, இந்தோனேசியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, அரபு நாடுகள், கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன், டான்சானியா, உகாண்டா, கென்யா, ரியூனியன் தீவுகள், மொரீஷியஸ் என பல நாடுகளில் வெளியாக உள்ளது.
இதற்கு முன் வெளிவந்த அஜித் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கு வெளிநாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.