‘வேதாளம்’ – பாராட்டித் தள்ளும் குஷ்பு

நடிகை குஷ்பு ‘வேதாளம்’ படத்தைப் பாராட்டி தன்னுடைய டிவிட்டரில் தொடர்ச்சியாக சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

குஷ்பு நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை, அவரை எப்போதும் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனியுடனே ஒப்பிட்டுப் பேசுவார்.

‘வேதாளம்’ படத்தை சற்று முன் பார்த்த குஷ்பு அது பற்றி பதிவிட்டிருப்பதாவது,

“தல..தல…தல…தல…தெறி மாஸ்…இரண்டாவது பகுதி இனிதான் ஆரம்பமாக வேண்டும். ஏன் தல இந்த தெறிக்க விடுற மாஸ்..

தல, நீ செம ஸ்டைல், கெட்டவன் ஆனா அன்பானவன். தல உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம். வேதாளம், மிகப் பெரிய பிளாக் பஸ்டர்,” என இடைவேளை வரை படத்தைப் பார்த்தது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டும் பார்ப்பதற்காக காத்திருக்க முடியாது. தல, என்னுடைய ஜார்ஜ் குளூனி, பட்டைய கௌப்புங்க, நம்ம தலக்கு விசில் போடுங்க,” என படம் பார்த்து முடித்ததும் பாராட்டியுள்ளார்.

Read Previous

‘பிரேமம்’ ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்

Read Next

இயக்கத்திலும் அசத்த வரும் ஆன்டனி