ஒரு சில தாமதத்திற்குப் பின் ‘ரஜினி முருகன்’ படம் வெளிவந்தாலும் மீண்டும் ஒரு வெளியீட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி ஆகியோரோடு எண்ணற்ற நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
குடும்ப உறவுகளைப் பற்றிய படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. அதை காதல், நகைச்சுவை கலந்த பாணியில் அனைத்து ரசிகர்களுக்குமான படமாக பொன்ராம் இயக்கியிருக்கிறார்.
டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள ‘ரஜினி முருகன்’ படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம் என படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.