‘தங்க மகன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

கோபுரம் பிலிம்ஸ், உண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தங்கமகன்’.

இப்படத்திற்கு இன்று தணிக்கை நடைபெற்றது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வேல்ராஜ், தனுஷ், அனிருத் மீண்டும் கூட்டணி சேர்ந்த படம்தான் ‘தங்க மகன்’.

தனுஷ் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். தனுஷ் அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளார்கள்.

அடுத்த வாரம் டிசம்பர் 18ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Read Previous

சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா, எதிர்பார்க்காத கூட்டணி

Read Next

‘ரஜினி முருகன்’ பொங்கல் ரிலீஸ்