இ 5 என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா, மெட்ரோ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஹன் இசையமைப்பில் சிரிஷ், பாபி சிம்ஹா, மாயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மெட்ரோ’.
இந்தப் படத்தில் ஜோஹன் இசையில் கானா பாலா பாடியுள்ள ‘பூமி…’ என்ற பாடலை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
நேற்று வெளியான ‘மெட்ரோ’ படத்தின் டிரைலரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உட்பல பல திரையுலகப் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
‘ஆள்’ என்ற வித்தியாசமான ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுத்து விமர்சர்களின் பாராட்டைப் பெற்ற ஆனந்த் கிருஷ்ணன் ‘மெட்ரோ’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படமும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் ஆகவே உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகிறது.