முக்தா வி. சீனிவாசன் இயக்கும் ‘மனித நேயர் ராமானுஜர்’

சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன் ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து இயக்கியவர் முக்தா வி.சீனிவாசன்.

அவர் திரைப்படத் துறைக்கு வந்து 70 ஆண்டுகளைக் கடந்து விட்டார். 25 வருடங்களாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்க உள்ளார்.

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்கையைத் தழுவி ‘மனித நேயர் ராமானுஜர்’ என்ற படத்தை இயக்கித் தயாரிக்கிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது

“ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க இருக்கிறார். பிரபல நடிகர்கள் திரையில் கதாபாத்திரமாக பதிய மாட்டார்கள். அவர்களது இமேஜ் அந்த கதாப்பாத்திரத்தை மழுங்கடித்து விடும். அதனால்தான் ராமானுஜராக புதுமுகத்தை நடிக்க வைக்க உள்ளேன்.

பிராமணர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்த முதல் ஆள் ராமானுஜர்தான்.

இது எனது 45 படம். மார்ச் மாதம் படப்பிடிப்பை துவக்கி மூன்றே மாதத்தில் திரையிட உள்ளோம். ஸ்ரீ பெரும்பத்தூர், கல்யாணபுரம், கோவிலடி, திருக்கோவிலூர், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் ஸ்ரீ ராமானுஜர். அவரது வாழ்கையை திரையில் பதிவிடுவதில் எனக்குப் பெருமையே,” என்கிறார் முக்தா.வி.சீனிவாசன்.

முக்தா.வி.சீனிவாசன் இதுவரை இயக்கி, தயாரித்த படங்கள்…

முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம், ஓடி விளையாடு பாபா, மகனே கேள், ஸ்ரீ ராமஜெயம், சினிமா பைத்தியம், பனித்திரை, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், தேன் மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், ஆயிரம் பொய், நிறைகுடம், அருணோதயம், தவப் புதல்வன், சூரியகாந்தி, அன்பைத் தேடி, அந்தரங்கம், பேரும் புகழும், அந்தமான் காதலி, இமயம், அவன் அவள் அது, பொல்லாதவன், கீழ் வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல், பரிட்சைக்கு நேரமாச்சு, சிவப்பு சூரியன், தம்பதிகள், இரு மேதைகள், ஒரு மலரின் பயணம், கோடை மழை, நாயகன் ( தயாரிப்பு மட்டும் ), கதாநாயகன், சின்னச் சின்ன ஆசைகள், எதிர் காற்று, பிரம்மச்சாரி, ராஜ பாண்டி, வாய்க் கொழுப்பு, கண்களின் வார்த்தைகள், பாஞ்சாலி, பலப் பரீட்சை.

Read Previous

கார்த்தி வெளியிட்ட ‘மெட்ரோ’ படத்தின் ‘பூமி…’ பாடல்

Read Next

Oru Iyakkunarin Kadhal Dairy – Teaser