விக்ரம் – நயன்தாரா நடிக்கும் ‘இரு முகன்’

‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘இரு முகன்’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகிறது.

விக்ரம் ஜோடியாக நயன்தாரா முதல் முறையாக நடிக்கிறார். ‘அரிமா நம்பி’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக இயக்குனருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அவர் சொன்ன ‘இரு முகன்’ படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக இருந்ததால் விக்ரம் நடிக்க சம்மதித்தார். நயன்தாரா திரையுலகில் நடிக்க வந்து பத்து வருடங்களாகியும் இதுவரை விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. முதல் முறையாக இந்தப் படத்தில்தான் நடிக்க உள்ளார்.

புதிய கூட்டணி புதுமையான படத்தைத் தரும் என நம்பலாம்…

Read Previous

Oyee – Official First Look Teaser

Read Next

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘ரஜினி முருகன்’