பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் ரசிகர்களிடையே ‘ரஜினி முருகன்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஒரு படம் இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் வெளி வராமல் போனாலும், அந்தப் படத்திற்கு இப்படியொரு வரவேற்பு இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
பொங்கல் படங்களில் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வகையில் இருக்கும் போது இந்தப் படத்தில் மட்டும் நகைச்சுவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம்.
சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் ரசிகர்களை கலகலவென சிரிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை படம் வாங்கியவர்களிடம் உள்ளது. அதுவே, ரசிகர்களிடமும் உள்ளதால் அதிக திரையரங்குகள் இப்படத்திற்கக் கிடைக்க காரணமாகவும் அமைந்திருக்கிறது.
இமான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாகவும் வசூல் சாதனை புரியும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இன்று முதல் இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகிறது.