அருண் விஜய் நடித்துள்ள ‘வா டீல்’ படத்தை இயக்கியுள்ள ரத்தினசிவா, விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்திற்கு ‘றெக்க’ எனப் பெயரிட்டுள்ளார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக முதன் முறையாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார்.
இமான் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். கே.எல். பிரவீன் படத் தொகுப்பு செய்ய, மோகன மகேந்திரன் அரங்க அமைப்பை கவனித்துக் கொள்ள, ராஜசேகர் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.
இதுவரை விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டு காதல் கலந்த மாஸ் என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளது.
விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் ‘தர்மதுரை, ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.