6 நிமிடப் படம் யு டியூபில் வெளியீடு…இதுதான் வித்தியாசமா ?

“டீசரை வெளியிட்டுப் பார்த்திருப்பீங்க, டிரைலரை வெளியிட்டுப் பார்த்திருப்பீங்க, பாட்டை வெளியிட்டுப் பார்த்திருப்பீங்க, டெலிட்டட் சீனை வெளியிட்டுப் பார்த்திருப்பீங்க, ஆனால், வெளிவரப் போற படத்தோட ஆறு நிமிடத்தை யு டியூபுல வெளியிட்டுப் பார்த்திருக்கீங்களா..பார்த்திருக்கீங்களா…” என வசனம் பேச வைத்துவிட்டார்கள்.

‘ராஜதந்திரம்’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தின் 6 நிமிடக் காட்சிகளைத்தான் தற்போது யு டியூபில் வெளியிட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு இதே நாளில் ‘ராஜதந்திரம்’ படத்தின் முதல் பாகம் தியேட்டர்களில் வெளியானது. அதன் நினைவாக அதே மார்ச் 13ம் தேதி இரண்டாம் பாகத்தின் காட்சிகளை யு டியூபில் வெளியிட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்களாம்.

சில நிமிடங்களுக்கு முன்னர் இயக்குனர் கௌதம் மேனன் இதை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் வீரா, அஜய் பிரசாத், டர்புகா சிவா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யு டியூபுல வெளியிடறத 6 நிமிஷப் படத்தோட நிறுத்திக்கங்கப்பா…உங்க வித்தியாசமான ஆர்வத்துக்கு அளவேயில்லையா…

Read Previous

நல்ல டெக்னீஷியன்களுடன் வரும் ‘சவாரி’

Read Next

மீண்டும் வெற்றிப் பாதையில் விஜய் சேதுபதி